பிரபுதேவாவுக்கு ஜோடியான ஐஸ்வர்யா

பிரபுதேவாவுக்கு ஜோடியான ஐஸ்வர்யா

1 mins read
94b8da27-18e5-41e1-a603-75512cf6076a
-

முதன்முறையாக பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். ஏற்கெனவே விஜய் இயக்கத்தில் 'தேவி' படத்தில் நடித்துள்ளார் பிரபுதேவா. அப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் 'கரு' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஏ.எல்.விஜய், மீண்டும் பிரபுதேவாவை இயக்க உள்ளார். இதில் நாயகியாக நடிப்பது தமக்கு உற்சாகம் அளிப்பதாக ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார். இந்தப் படத்தில் கருணாகரனுக்கும் முக்கிய கதாபாத்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக சாம், படத் தொகுப்பாளராக ஆண்டனி ஆகியோரும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இப்புதிய படத்துக்கான பூசை அண்மையில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளனர். ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாக இருக்கிறது. இது அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் கொண்ட படமாக இருக்கும்.