கொடுத்த வழக்கில் சிக்கியுள்ள நடிகர் திலீப்பின் படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'ராம்லீலா' என்ற தலைப்பில் உருவாகி உள்ள அப்படத்தை திரைக்குக் கொண்டுவர அதன் தயாரிப்பாளர் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆனால் அந்தப் படம் வெளியாகும் திரையரங் குகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாகச் சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் திலீப் பின் படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பி இருப்பது துரதிர்ஷ்டவசமானது என நடிகையும் திலீப்பின் முன்னாள் மனைவியுமான மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். திலீப் மீது உள்ள தனிப்பட்ட எதிர்ப்பை சினிமா மீது காட்டக் கூடாது என்றும் சினிமா என்பது பலரின் உழைப்பில் உருவாவது என்றும் மஞ்சு வாரியர் கூறியுள்ளார். "சினிமா என்பது தனி ஒருவருக்குச் சொந்தமானது அல்ல. எனவே திலீப் நடித்த அந்தப் படம் வெளிவந்து அனைவரும் அதைப் பார்க்க வேண்டும். அதன் மூலம் தனக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் நினைப்பார். "எனவே அந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்று கூறுவது சினிமாவுக்கு செய்யும் அநீதி. ரசிகர்கள் 'ராம்லீலா'வைப் பார்க்கட்டும்," என மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
தன்னை விவாகரத்து செய்ததுடன், பாலியல் தொல்லை வழக்கிலும் சிக்கி சிறை சென்றுள்ள திலீப்புக்கு, இக்கட்டான நேரத்தில் மஞ்சு வாரியர் ஆதரவுக்கரம் நீட்டியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. மஞ்சு வாரியருக்கு ரொம்பப் பெரிய மனம் உள்ளது என்று பலர் சமூக வலைத் தளங்களில் அவரைப் பாராட்டி வருகின்றனர். அதே சமயம் திலீப்புக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடாது என்றும் ஒரு தரப்பு கூறி வருகிறது. இதற்கிடையே 'ராம்லீலா' வெளியாகும் திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது.

