விரைவில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'

விரைவில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'

1 mins read
6c1edf3e-d3e8-41b0-aefc-6feff689c8c2
-

விரைவில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு மையாக முடிந்து விட்டதாக தெரியவந்துள்ளது. அரவிந்த் சாமி, அமலாபால் இருவரும் ஜோடி சேர்ந்து நடித் திருக்கும் படம். இது மலையாளத் தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' என்ற படத்தின் தமிழ்ப் பதிப்பாக உருவாகி உள்ளது. மலையாளத்தில் இந்தப் படத் துக்கு பெரும் வரவேற்பு கிடைத் தது. இதையடுத்து மலையாளப் பதிப்பை இயக்கிய சித்திக் தமிழிலும் இயக்கி உள்ளார். இதில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா, முக்கிய வேடத்தில் இந்தி நடிகர் ஆஃப்தாப் ‌ஷிவ்தசானி ஆகியோரும் நடித்துள்ளனர்.

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் அரவிந்த் சாமி, அமலாபால்.