'ஹரஹர மஹாதேவகி' படத்தில் ஆபாசம் இல்லை: கெளதம்

'ஹரஹர மஹாதேவகி' படத்தில் ஆபாசம் இல்லை: கெளதம்

1 mins read
c236bd1c-4996-4817-a8ca-98628b95fedd
-

ஒரு படம் திரை காணும் முன்பே அது குறித்து எத்தகைய செய்திகள் வெளி வந்தாலும், அது அப்படத்துக்கான இலவச விளம்பரமாகவே அமையும். அந்த வகையில் கவுதம் கார்த்திக் நடித்துள்ள 'ஹரஹர மஹாதேவகி' படம் குறித்தும் கடந்த சில தினங்களாக புதுப்புது தகவல்கள் வெளிவந்தன. அவற்றில் பல தகவல்கள் தவறானவை என கவுதமும், பட இயக்குநர் சந்தோ‌ஷும் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் ஆபாச தொனியுடன் கூடிய நகைச்சுவை இடம்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது. முத்தக் காட்சிகள் இருப்பதாகவும் சிலர் கூறி வந்தனர். இந்நிலையில் சென்னையில் செய் தியாளர்களிடம் பேசிய கவுதம் காரத்திக், சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டுள் ளது போல், 'ஹர ஹர மஹா தேவகி' யில் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் அறவே இல்லை என விளக்கம் அளித்தார்.