'நீங்க ஷட்டப் பண்ணுங்க' பாடல்

'நீங்க ஷட்டப் பண்ணுங்க' பாடல்

1 mins read
b3a4857a-e416-4c9c-8913-316ccba4c334
-

சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பலூன்' படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் 'நீங்க ஷட்டப் பண்ணுங்க' என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. யுவன் இசையில், சக இசையமைப்பாளரான அனிருத் பாடியுள்ள இந்தப் பாடலுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அருண் ராஜா காமராஜ் பாடலை இயற்றியுள்ளார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் சக போட்டியாளரை நோக்கி 'நீங்க ஷட்டப் பண்ணுங்க' என ஓவியா கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் படத்துக்கு நல்ல விளம்பரமாக அமைந்துவிட்டதாம். அதே சமயம் இப்பாடல் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை என்றும் சிலர் சமூக வலைத்தளங் களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் படக்குழு இது குறித்து அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. 'பலூன்' படத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி அய்யர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.