இரு பேய்ப் படங்களில் நடிக்கும் ஓவியா

இரு பேய்ப் படங்களில் நடிக்கும் ஓவியா

1 mins read
f3cd7a02-f3d8-4c99-8502-8455422c18a2
-

'பிக் பாஸ்' தேவதையாக வலம்வந்த ஓவியா, அடுத்தடுத்து இரண்டு பேய்ப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இயக்குநர் டி.கே கைவண்ணத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் 'யாமிருக்க பயமே'. இதன் இரண்டாம் பாகத்தை 'காட்டேரி' என்ற பெயரில் அவர் படமாக்க உள்ளார். இதில் ஓவியா கதாநாயகியாக நடிக்க, கிருஷ்ணா, ரூபா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இது நகைச்சுவை கலந்த திரைப்படமாக உருவாக உள்ளது. ஏற்கெனவே சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், ஓவியா இணைந்து `இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற பேய் கதையில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரு பேய்ப் படங்களில் ஓவியா நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. ஓவியாவும் பேய்ப் படங்களில் நடிப்பது நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் திகில் கலந்த உற்சாகத்துடன் கூறி வருகிறாராம்.