விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஸ்கெட்ச்'. இந்தப் படத்திற்காக சென்னையில் மிக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு 'அச்சி புச்சி ஸ்கெட்சு' என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் விக்ரமுடன் 150 நடன அழகிகளும் 1,500க்கும் மேற்பட்ட துணை நடிகர்களும் பங்கேற்றனர். பிரபல நடன இயக்குநர் தஸ்தாகீர் நடன அமைப்பில் இப்பாடல் படமாக்கப்பட்டது. வட சென்னையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
'ஸ்கெட்ச்' படத்திற்காக 1,500 நடனமணிகளுடன் நடனமாடிய விக்ரம்
1 mins read
-

