நடிகை அஞ்சலியின் தங்கையும் திரை யுலகில் அறிமுகமாக உள்ளார். நல்ல பாத்திரங்களிலும் தேவைப்பட்டால் கவர்ச்சி யாகவும் நடிக்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை அஞ்சலி, அவரது சித்தி பாரதி தேவி இடையே வெளிப்படையாக மோதல் மூண் டது. இதையடுத்து சித்தியின் உறவை முறித்துக்கொண்டார் அஞ்சலி. தற்போது வரை தனியாகவே இருந்து வருகிறார். இந்நிலையில், அஞ்சலியின் சித்தி பாரதி தேவியின் மகள் ஆராத்யா தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார். இதையடுத்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அஞ்சலி எனது பாசத்துக்குரிய சகோதரி எனக் குறிப்பிட்டார். இதற்கு அஞ்சலி தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "எனக்கு ஒரே ஒரு அக்கா மட்டுமே இருக்கிறார். அவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. வேறு யாரும் எனக்கு சகோதரி அல்ல," என அஞ்சலி பதிலடி கொடுக்க, அதற்கும் பாசமாகவே விளக்கம் அளித்துள்ளார் ஆராத்யா.
தங்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அஞ்சலி
1 mins read
-

