விஜய் சேதுபதி: நடிகருக்காக எந்தவொரு படமும் ஓடாது

விஜய் சேதுபதி: நடிகருக்காக எந்தவொரு படமும் ஓடாது

1 mins read
5c15dccb-c4d1-4623-bf9b-4eecd3280b75
-

தமது படங்கள் மட்டுமே தரமானவை, அவை மட்டுமே ரசிகர்களால் வரவேற்கப்பட வேண்டும் என்கிற எண்ணம் தமக்கு அறவே இல்லை என விஜய் சேதுபதி கூறியுள்ளார். அனைத்து படங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட வேண்டும் என்பதே தமது விருப்பம் என அவர் தெரிவித் துள்ளார். "என்னிடம் வரும் கதை சுவாரசி யமாக சொல்லப்பட்டு இருக்கிறதா? என்றுதான் பார்க்கிறேன். நடிகருக்காக மட்டுமே எந்தவொரு படமும் ஓடாது என்பதை முழுமையாக நம்புகிறேன். "முதல் நாள், முதல் காட்சியில் திரையில் வரும் முதல் 10 நிமிட காட் சிகள் மட்டுமே நடிகருக்காக இருக்கும். அதற்குப் பிறகு கதை என்ன சொல் கிறது என்றுதான் ரசிகர்கள் பார்ப் பார்கள். "விஜய் சேதுபதி என்பவன் பெரிய ஆளெல்லாம் இல்லை. அவனும் ஒரு சாதாரணமான ஆள்தான். அவ னுக்கும் மசாலா படம் செய்யவேண் டும், அவன் அடித்தாலும் 10 பேர் பறக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

'கருப்பன்' படக்காட்சியில் விஜய் சேதுபதி, தன்யா.