ஆயுத பூஜைக்கு வெளி வந்திருக்கும் 'கருப்பன்' படத்தில் தனக்கு நல்ல பெயர் கிடைத்திருப்பதாகவும் நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் கூறுகிறார் மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா. "இந்தப் படத்தில் நடிக்கும்போது சிறு தவறுகள் கூட இல்லாமல் இயக்குநர் பன்னீர்செல்வமும் நாயகன் விஜய் சேதுபதியும் கற்றுக் கொடுத்தனர். அவர்களின் ஒத்துழைப்பால் இந்தப் படத்தில் நன்றாக நடிக்க முடிந்தது. தமிழ்த் திரையில் தமிழ் நடிகைகள் அதிகமாக இல்லை என்கிற ஆதங்கம் அனைவருக்குமே இருக்கிறது. குறிப்பாக 'கருப்பன்' படத்திற்குப் பிறகு தான்யா எந்த மாதிரியான வேடம் கொடுத்தாலும் நடிப்பார் என்கிற நம்பிக்கை இயக்குநர் களுக்கு ஏற்படும். அதனால் இந்தப் படம் வெளியான பிறகு அடுத்தடுத்து புதிய படங்கள் எனக்குக் கிடைக்கும் வாய்ப்பு கள் அதிகம் இருக்கிறது," என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தன்யா.
கருப்பனால் நம்பிக்கை
1 mins read
-

