படப்பிடிப்பிற்கு முன்பே படம் விலை போனது

படப்பிடிப்பிற்கு முன்பே படம் விலை போனது

1 mins read
ff4bda7d-6004-47d3-be47-08f965901403
-

விஜய் சேதுபதி அடுத்து நடிக்க இருக்கும் படம் 'ஜுங்கா'. 'வனமகன்' படத்தில் அறிமுகமான சாயிஷா நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் அடுத்த வாரம் பிரான்சில் தொடங்குகிறது. இதற்காக வருகிற 3ஆம் தேதி படப்பிடிப்புக் குழுவினர் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்கிறார்கள். இந்தப் படத்தை 20 கோடி ரூபாய் வரவு செலவுத் திட்டத்தில் விஜய் சேதுபதியே தயாரிக்கிறார். படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பாகவே படத்தை அருண் பாண்டியனின் 'ஏ அண்ட் பி நிறுவனம்' முதல் காப்பி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. விஜய் சேதுபதியின் படம் படப்பிடிப்பு தொடங்குதற்கு முன்பே விற்பனையாவது இதுதான் முதல் முறை.