ஓவியா தீபாவளி

ஓவியா தீபாவளி

1 mins read
3c121a2a-c3c2-4a4e-82b6-9291c901f287
-

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பும் 'பிக்பாஸ்' வீட்டிற்குள் தனது தனித்துத் தெரியும் நற்குணங்களால் சக போட்டியாளர்களால் அவமானப்படுத்தப்பட்டாலும் ஓவியாவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதனால் சமூக வலைத்தளங்களில் 'ஓவியா ஆர்மி' என்ற பெயரில் ஒரு ரசிகர் படையே உருவானது. 'பிக்பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு மக்கள் மத்தியில் தனக்கு உள்ள வரவேற்பைப் புரிந்துகொண்டார் ஓவியா. அவர் முன்பு நடித்த படங்களை எல்லாம் இந்த நேரத்தில் வெளியிட்டு லாபம் பார்க்க நினைக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். ஆகவே ஓவியாவும் மக்கள் ஆதரவைப் பயன்படுத்தி சம்பாதிக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்.

சாதாரணமாக கடைத் திறப்பு விழாவுக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டிருந்த ஓவியா இரண்டு நாட்களுக்கு முன்பாக ஓஎம்ஆர் சாலையில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் கடையைத் திறந்துவைக்கவும் விளம்பரத்தில் நடிக்கவும் ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கியதாகச் செய்திகள் வெளியாயின. ஓவியாவுக்குத் தற்போதுதானே மார்க்கெட் பிடித்தது. அதற்குள் ரூ.1.5 கோடி சம்பளமா என்று ஆளாளுக்கு வியந்தனர். மார்க்கெட்டுக்கு ஏற்றபடிதான் சம்பளம் பெறப்பட்டுள்ளது என்றும் ரூ.1.5 கோடி என்பது எல்லாம் உண்மை இல்லை என்றும் ஓவியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓவியாவுக்கு எவ்வளவு சம்பளம் கிடைத்தது என்பதை மட்டும் தெரிவிக்கவில்லை. இந்த ஆண்டு தீபாவளிக்கு நட்சத்திர நடிகை ஓவியாதான். முன்னணி வியாபார நிறுவனங்கள் ஓவியாவைக் கொண்டு தீபாவளி விளம்பரங்களைத் தயாரித்துள்ளன. இந்த விளம்பரங்களில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார் ஓவியா.