தோழர் அரங்கன் இயக்கத்தில் கும்பகோணம் குணாவாக கிஷோர் நடிக்கும் படம் 'கதிர்'. இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது. கும்பகோணத்தில் பேருந்து 'ஸ்டாண்ட்' குணா என்பவரை அனைவருக்கும் தெரியும். அவருடைய வாழ்க்கையைப் படமாக எடுக்கிறார்கள். குணாவாக கிஷோர் நடிக்கிறார். இவரை எதிர்த்து மோதும் சங்கிலி வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் எட்டு முறை குங்ஃபுவில் 'பிளாக் பெல்ட்' வாங்கிய மாஸ்டர் ராஜநாயகம் நடிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் தோழர் அரங்கன், தமிழ்ச் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் பலரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.
கும்பகோணம் குணாவான கிஷோர்
1 mins read
-

