கடல் பயணம் என்றால் பார்வதி நாயருக்கு கொள்ளைப் பிரியமாம். நீண்ட கடற்கரையில் நன்கு காற்று வாங்கிக் கொண்டு படுத்துக்கிடப்பதில் கிடைக்கும் சுகமே அலாதியானது என்கிறார். தென்னிந்திய மொழிப் படங்களில் பார்வதிக்கு ஓரளவு வாய்ப்பு கிடைத்து வருகிறது. தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவற்றுள் ஒரு படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தமது டுவிட்டர் பக்கத்தில் கடல் பயணம் குறித்துப் பதிவிட்டுள்ளார். "கடல் பயணத்தின்போது என்னையே மறந்துவிடுவேன். கடற்கரை ஓரத்தில் சூரிய ஒளியில் நேரத்தைச் செலவிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போல் கடலில் இருப்பதும் உற்சாகம் தருகிறது," என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் பார்வதி. ஒரு வேளை கடல் பயணத்தை மையமாக வைத்து ஒரு படம் உருவாகும் பட்சத்தில் அதில் எந்தவிதத் தயக்கமும் இன்றி நடிக்க ஒப்புக்கொள்வார் என்பதுடன் சம்பளத்தையும் குறைத்துக்கொள்வார் என்கிறார்கள் பார்வதிக்கு நெருக்கமானவர்கள்.

