'செல்சியின் தோல்விக்கு சோர்வுதான் காரணம்'

'செல்சியின் தோல்விக்கு சோர்வுதான் காரணம்'

1 mins read
e90fb7fd-1eb9-46e8-b22a-5c47637aacf2
-

லண்டன்: நேற்று அதிகாலை நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் செல்சியை 1-0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி வீழ்த்தியது. ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் டி பிராய்ன் போட்ட கோல் சிட்டிக்கு மூன்று புள்ளிகளைப் பெற்றுத் தந்தது. இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் 19 புள்ளிகளுடன் சிட்டி முன்னிலை வகிக்கிறது. செல்சி 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், செல்சியின் தோல்விக்குச் சோர்வுதான் காரணம் என்று அதன் நிர்வாகி அண்டோனியோ கோன்ட்டே தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்புதான் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் அட்லெட்டிக் கோ மட்ரிட்டுடன் செல்சி மோதியதை அவர் சுட்டினார். அந்த ஆட்டத்தை 2-1 எனும் கோல் கணக்கில் செல்சி கைப்பற்றியது. அட்லெட்டிக்கோவுக்கு எதிரான ஆட்டம் சவால்மிக்கதாக இருந்த தாகவும் அதனால் போதிய ஓய்வு இல்லாமல் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் செல்சி ஆட்டக் காரர்கள் களமிறங்கியதாகவும் கோன்ட்டே கூறினார்.

செல்சி வீரரிடமிருந்து (நடுவில்) பந்தைப் பறிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடும் மான்செஸ்டர் சிட்டி ஆட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்