'வத்திகுச்சி' திலீபன் நடிக்கும் 'குத்தூசி'

'வத்திகுச்சி' திலீபன் நடிக்கும் 'குத்தூசி'

1 mins read
9b58ed23-4584-419a-9fec-84b93c04bc3b
-

இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற நல்ல கருத்தை முன்வைக்கும் படமாக உருவாகி இருக்கிறது 'குத்தூசி'. ஸ்ரீ லட்சுமி ஸ்டூடியோஸ் சார்பில் எம்.தியாகராஜன் தயாரித்துள்ளார். 'வத்திகுச்சி' திலீபன், அறிமுக நடிகை அமலா, யோகி பாபு, ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். "இதுவரை தமிழ்ச் சினிமாவில் விவசாயம் சார்ந்த ஏராளமான படங்களைப் பார்த்திருப்போம். ஆனால் முதன்முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்பவேண்டும் என்பதைக் கூறும் படமாகவும் இது உருவாகியுள்ளது," என்கிறார் இயக்குநர் சிவசக்தி.