சீனு ராமசாமி இயக்கத்தில் அதர்வா

சீனு ராமசாமி இயக்கத்தில் அதர்வா

1 mins read
9d25a1e8-6097-4224-b3af-3897c7edb298
-

சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 'தர்மதுரை'யின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க இருந்தார் சீனு ராமசாமி. அந்தப் படத்துக்கு 'மா மனிதன்' என்று தலைப்பும் வைக்கப்பட்டது. எனினும் சில காரணங்களால் அப்படத்தின் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதற்கிடையே விஜய் சேதுபதியும் சில புதிய படங்களுக்கு கால்‌ஷீட் ஒதுக்கிவிட்டார். டங்களுக்கு கால்‌ஷீட் ஒதுக்கிவிட்டார். இந்நிலையில் அதர்வாவை வைத்து சீனு ராமசாமி புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதர்வா தற்போது 'செம போத ஆகாதே', 'ருக்குமணி வண்டி வருது', 'இமைக்கா நொடிகள்', 'ஒத்தைக்கு ஒத்த' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சீனு ராமசாமி இயக்கத்தில் அதர்வா நடிக்க இருக்கும் புதிய படத்துக்கு 'ஒரு ஜீவன் அழைத்தது' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதர்வாவுக்கு கல்லூரி மாணவர் வேடமாம். இது கிராமத்துப் பின்னணியில் நடக்கும் திகில் கதையாம். நாயகி மற்றும் இதர கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.