'அடங்காதே' படக்குழுவில் இணைந்த சீமான்

'அடங்காதே' படக்குழுவில் இணைந்த சீமான்

1 mins read
fd11cc69-f6b9-49c2-802b-e692cb9c73f2
-

'அடங்காதே' என்ற தலைப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் ஜி.வி.பிரகா‌ஷுடன் இணைந்து நடிக்கிறார் சீமான். அறிமுக இயக்குநர் சண்முகம் முத்து சுவாமி இயக்கத்தில் உருவாகி வருகிறது இப்படம். சென்னை, வாரணாசி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். தற்போது இறுதிக்கட்ட காட்சி களைப் படமாக்கி வருகின்றனர். எம்.எஸ்.சரவணன் இப் படத்தைத் தயாரிக்கிறார். சரத் குமார், மந்திரா பேடி, சுரபி, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள் ளனர். இந்நிலையில் சரத்குமாரைத் தவிர இன்னொரு அரசியல் பிரமுகரும் இந்தப் படத்தில் இணைய இருப்பதாக படக் குழுவினர் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தனர். அந்த அரசியல் பிரமுகர் சீமான் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

'அடங்காதே' படப்பிடிப்பின்போது ஜி.வி.பிரகாஷ், சீமான்.