எம்.ஏ.பாலா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்'. இந்திய ராணுவத்தில் சிறப்புப் பிரிவில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் இவர். இப்படத்தில் கதை நாயகர்களாக தீபக், பிளாக் பாண்டி, ஜெய்சிந்த் ஆகியோரும் நாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோரும் நடித்துள்ளனர். "பார்க்காத காதல், சொல்லாத காதல் என தமிழ் சினிமாவின் அகராதியில் காதல் இல்லாத பக்கமே இல்லை. இப்படத்தில் தன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டுத் தேடுகிறார் கார்த்திகேயன். அவரது வாழ்க்கையில் ஒரு நாள் நேரும் விபரீதமான நிகழ்வுகளை விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கிறோம். இறுதியில் கார்த்திகேயன் தன் காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா என்பதே இப்படத்தின் கதை," என்கிறார் எம்.ஏ.பாலா. ராஜ் பரத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாலாவின் கைவண்ணத்தில் கதை, திரைக்கதை உருவாகி உள்ளது.
'கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்'
1 mins read
-

