படப்பிடிப்பின்போது நிஜ கல்லறையில் நடித்தது திகிலான அனுபவம் என் கிறார் நடிகை இனியா. பரத், இனியா இணைந்து நடிக்கும் படம் 'பொட்டு'. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் வடி வுடையான். "இப்படம் மருத்துவக் கல்லூரிப் பின்னணியில் பேய்ப் படமாக உருவாகி வருகிறது. நாயகனாக நடிக்கும் பரத் பல தோற்றங்களில் நடித்திருக்கிறார். என்னைத் தவிர சிருஷ்டி டாங்கேவும் இன்னொரு கதாநாயகியாக வருகிறார். நமீதாவுக்கு அகோரி வேடம். "இதில் எனக்கு மலைவாழ் இனப் பெண், நாகரிகப் பெண் என இரண்டு கதாபாத்திரங்கள். மலைவாழ் பெண் ணாக வரும் கதாபாத்திரத்துக்கு 'பொட்டம்மாள்' என்று பெயர். "முதலில் பேய்ப் படத்தில் நடிக்க வேண்டுமா என யோசித்தேன். இயக் குநர் கூறிய முழுக் கதையையும் கேட்ட பின்னர், இது வித்தியாசமான கதையாக இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
"இது போன்ற பேய்ப் படத்தில் நடித்தது வித்தியாசமான, திகிலான அனுபவமாக இருந்தது. குறிப்பாக இரவு நேரங்களில் அரங்கு ஏதும் அமைக்கப்படாமல் நிஜ கல்லறையில் படப்பிடிப்பு நடந்தது. அக்காட்சிகளில் நடிக்கும்போது உண்மையாகவே பயமாகத்தான் இருந்தது. பின்னர் சுதாரித்துக்கொண்டு நடித்தேன்.
'பொட்டு' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் இனியா.

