மந்திரா பேடியின் அற்புதமான பயணம்

மந்திரா பேடியின் அற்புதமான பயணம்

1 mins read
47f72bc1-2c3f-4b88-8861-8db7a5ff9ccd
-

'அடங்காதே' படத்தில் நடித்தது மறக்க முடியாத, அற்புதமான ஒரு பயணம் என இந்தி நடிகை மந்திரா பேடி தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். இதில் மந்திரா பேடிக்கு காவல்துறை அதிகாரி வேடமாம். "இந்தப் படத்துக்காக தமிழ் பேச கற்றுக் கொண்டேன். மொழியை கற்றுக்கொண்டால், நான் ஏற்கும் கதாபாத்திரத்தை திரையில் முழுமையாக வெளிப்படுத்த முடியும் எனக் கருதினேன். அதனால் தமிழ் கற்றேன். "இப்படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் ஆகியோரது உழைப்பு வீண் போகாது," என்கிறார் மந்திரா. கடைசியாக பல ஆண்டுகளுக்கு முன் சிம்புவுடன் 'மன்மதன்' படத்தில் இவர் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.