குறும்படத்தில் திரி‌ஷா

குறும்படத்தில் திரி‌ஷா

1 mins read
709bad39-c169-453c-9017-8eb269d67b3f
-

கேரள அரசு தயாரித்த விழிப்புணர்வுக் குறும்படத்தில் திரி‌ஷா நடித்திருக்கிறார். திரி‌ஷாவின் தந்தை கிரு‌ஷ்ணன் பாலக்காட்டு மலையாளி. அம்மா உமா தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். திரி‌ஷா பிறந்ததும் பாலக்காட்டில்தான். திரி‌ஷா தற்பொழுது மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். கேரள அரசும் யுனிசெப் நிறுவனமும் இணைந்து குழந்தைகளுக்குத் தட்டம்மை நோய்த் தடுப்பூசி போட வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படம் ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டது. இது அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இதில் நடிகை திரி‌ஷா நடித்துள்ளார். அதில் அவர் மலையாளத்தில் பேசி குழந்தைகளுக்கு உரிய வயதில் தட்டம்மை தடுப்பூசி போடச்சொல்லி இருக்கிறார். திரி‌ஷாவுக்குத் தமிழே தடுமாறும் இந்நிலையில் மலையாளத்தில் எப்படி என்கிற உங்கள் சந்தேகம் சரிதான். தமிழ்த் திரையில் அவருக்குக் குரல் கொடுக்கும் பாடகி சின்மயிதான் மலையாளத்திலும் அவருக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.