தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் நடிகை திவ்யாவைத் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். சலீம், தர்மதுரை ஆகிய படங்களின் தயாரிப்பாளரும் 'தாரை தப்பட்டை', 'மருது' ஆகிய படங்களின் வில்லன் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் 'சுமங்கலி' தொடரில் நடிக்கும் திவ்யாவைத் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார். திவ்யா எனது பூர்வீகமான இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனக்கு அவரைப் பிடித்திருந்தது. இந்த முடிவு இரு வீட்டாரும் சேர்ந்து எடுத்தது. இது காதல் திருமணம் அல்ல. இரு வீட்டாரும் ஒன்றாகக் கலந்துபேசி எடுத்த முடிவு என்றார் ஆர்.கே.சுரேஷ்.
நடிகையை மணக்கிறார் ஆர்.கே.சுரேஷ்
1 mins read
-

