டாப்சி: அந்த அனுபவம் என்னை நடிகையாக நிலை நிறுத்தியுள்ளது

டாப்சி: அந்த அனுபவம் என்னை நடிகையாக நிலை நிறுத்தியுள்ளது

1 mins read
560df639-c51e-45c0-bddf-084566a0ad7c
-

"என் முன்னால் புகைப்படக் கருவியை வைத்துவிட்டு நடிக்கச் சொன்னால் அவர்கள் சொல்வதுபோல் என்னால் நடிக்க முடியாது. இதனாலேயே எல்லாச் சோதனைகளிலும் தோற்றிருக்கிறேன். "ஆனாலும் என் மீது அன்பு வைத்திருந்தவர்கள் மூலம் கிடைத்த ஊக்கு விப்பு எனக்கு உதவியது. அது என்னை உற்சாகமூட்டுவதாகவும் இருந்தது. "அவர்கள் என்னிடம் காட்டிய அன்பைத் தொடர்ந்து பெறவேண்டும் என்பதற்காக 100 விழுக்காடு நடிப்பை வெளிப்படுத்தா விட்டாலும் சிறிது சிறிதாக நடிப்பை வெளிப்படுத்தத் தொடங்கினேன்.

"அந்த அனுபவம் இன்று என்னை நடிகையாக நிலை நிறுத்தியிருக்கிறது," என்று டாப்சி மனந்திறந்துள்ளார். தமிழில் பல நல்ல படங்களில் நடித்து பெயர் வாங்கி தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ள டாப்சி மீண்டும் எப்போது தமிழ்த் திரையுலகிற்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். நல்ல கலகலப்பான, துடிப்புமிக்க கதாபாத்திரங்களில் வெளுத்துக்கட்டும் டாப்சி மீண்டும் தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் காலம் வெகு தூரமில்லை என்று கோலிவுட் வட்டாரம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அந்த அழகு கதாநாயகி மீண்டும் தமிழ் படங்களில் கதாநாயகியாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.