நித்யா மேனன் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு தமிழ்ப் படங்களில் மட்டுமே நடிக்கிறார். காஞ்சனா 2ல் சக்கைப்போடு போட்டு தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நித்யா மேனன். அதில் அவர் உடற்குறையுள்ளவராகத் திறன்பட நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துணிச் சலான கதாபாத்திரங்களிலும் அவர் எவ்வித தயக்கமின்றி நடிப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு 'முடிஞ்சா இவன புடி', 'இருமுகன்' படத்தில் நடித்திருந்தார். இந்த ஆண்டு அப்பாவின் மீசை, விஜய்யின் மெர்சல் படங்களில் நடிக்கிறார். நடிப்புத் தவிர பாடல், இயக்கம் ஆகியவற்றிலும் நித்யாவுக்கு ஆர்வம் உண்டு.
வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்று எண்ணும் ஒரு சில கதாநாயகிகளில் நித்யாவும் ஒருவர். அதனால்தான் அவரது பட எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறதாம். எழுத்தாளர்கள் சுதந்திரம் பற்றியும், சகிப்புத்தன்மை இன்மை பற்றியும் அண்மைகாலமாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அதன் பின்னணியில் பிராணா என்ற படம் மலையாளத்தில் உருவாகிறது. இந்தி, கன்னடம், தெலுங்கிலும் இப்படம் ஒரே நேரத்தில் உருவாகவிருக்கிறது. இதில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

