கவுதம் கார்த்திக்குடன் புதுப் படத்தில் ஜோடி சேர்கிறார் இளம் நாயகி ரெஜினா. இதே படத்தில்தான் கவுதம் தனது தந்தையும் நடிகருமான கார்த்திக்குடன் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களோடு சதீஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். மேலும், இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. "கவுதம் வேகமாக வளர்ந்து வரும் திறமைசாலி. அவருடன் இணைந்து நடிப்பது உற்சாகத்தை அளிக்கிறது. இந்தப் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும் என நம்புகிறேன்," என்கிறார் ரெஜினா.
நம்பிக்கை தெரிவிக்கும் ரெஜினா
1 mins read
-

