சிங்கின் காட்டில் சரியான வாய்ப்பு மழை. முன்னணி நாயகர்களின் படங்களில் வரிசையாக ஒப்பந்தமாகி வருகிறார். தற்போது 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ள அவர், மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளாராம். இயக்குநர் கண்ணனிடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் ராஜத். இவர் இயக்கும் படத்தில்தான் கார்த்தியும் ரகுல் பிரீத்தும் மீண்டும் இணைய உள்ளனர். இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தைத் தொடர்ந்து ராஜத் இயக்கும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளாராம் கார்த்தி. இதற்கிடையே எதிர்வரும் நவம்பர் 17ஆம் தேதி 'தீரன் அதிகாரம் ஒன்று' வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் இணையும் கார்த்தி, ரகுல் அண்மைக்காலமாக ரகுல் பிரீத்
1 mins read

