நவம்பர் 14ல் சந்தானம் படப் பாடல்கள் வெளியீடு

நவம்பர் 14ல் சந்தானம் படப் பாடல்கள் வெளியீடு

1 mins read
b6ebca0d-aa41-44b8-ad0d-a13cf0b10bdb
-

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'சக்க போடு போடு ராஜா'. இதன் பாடல் வெளியீட்டு விழாவை நவம்பர் 14ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்படத்துக்குச் சிம்பு இசையமைத்துள் ளார் என்பதுதான் விசேஷம். சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தில் விவேக், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சிம்பு இசையில் அனிருத் பாடிய 'கலக்கு மச்சான்' என்ற பாடல் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது. மேலும் யுவன் ஷங்கர் ராஜா, டி.ராஜேந் தர், உஷா ராஜேந்தர் உள்ளிட்டோரும் இப்படத்துக்காகப் பாடியுள்ளனர்.