அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்

அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்

1 mins read
cf5fd339-d372-4972-b856-470b121d3b98
-

'தம்பி வெட்டோத்தி சுந்தரம்', 'செளகார்பேட்டை' படங்களுக்குப் பிறகு வடிவுடையான் இயக்கும் படம் 'பொட்டு'. படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. இதுவும் பேய்க்கதையா என்று கேட்டால், மர்மப் புன்னகையை முகத்தில் தவழ விடுகிறார் வடிவுடையான். "செளகார்பேட்டை' படத்தை மனதில் வைத்து இப்படிக் கேட்கி றார்கள். இதை பத்தோடு பதி னொன்றாக வரும் பேய் படமாக ஓரம் கட்டமுடியாது. 'தம்பி வெட் டோத்தி சுந்தரம்' படத்தில் எப்படி ஒரு கதை இருந்ததோ அதுபோல் இதில் ஒரு அழுத்தமான கதை யோடு வந்திருக்கிறேன். இயக்கு நராக எனக்குத் தனி அடை யாளத்தை இந்தப் படம் பெற்றுத் தரும்," என்று பதில் வருகிறது. இது ஒரு மருத்துவக் கல்லூரி யின் பின்னணியில் நடக்கும் கதையாம். ஒரே கல்லூரியில் படிக்கும் மூன்று பேர் அமானுஷ்ய சக்தியால் பாதிக்கப்படுகிறார்கள். அந்தப் பிரச்சினைகளை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்?

அவற்றில் இருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதை விறு விறுப்பான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார்களாம். படத்தின் நாயகன் பரத். சிருஷ்டி டாங்கே, இனியா, நமீதா என மூன்று நாயகிகள் உள்ளனர். "நமீதாவை இதுவரை கவர்ச்சி நாயகியாகவே பார்த்திருப்பீர்கள். இதில் கவர்ச்சி இல்லாத அழகு நமீதாவைப் பார்க்கலாம். அவரது கதாபாத்திரத்துக்கான தோற்றம், உடை, ஒப்பனை என அனைத்தை யும் அவரே வடிவமைத்தார். "இனியா, சிருஷ்டி டாங்கே இருவரும் கல்லூரி மாணவிகளாக வருகிறார்கள்.

'பொட்டு' படத்தின் ஒரு காட்சியில் பரத், சிருஷ்டி டாங்கே.