ராதிகா ஆப்தே: நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரிப்பு

ராதிகா ஆப்தே: நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரிப்பு

1 mins read
18ac08b9-fcc9-463a-9acc-1d0c950b3f4d
-

சலசலப்பை ஏற்படுத்திய நாயகி தென்னிந்தியத் திரையுலம் குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் ராதிகா ஆப்தே. இது திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்தியத் திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் ரீதியில் நிறைய தொல்லைகள் ஏற்படுவதாகக் கூறியுள்ளார் ராதிகா. குறிப்பாக புதுப்பட வாய்ப்புகள் தேவையெனில் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நடிகைகள் நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பதே அவர் முன்வைத்துள்ள மிகப் பெரிய குற்றச்சாட்டு. தமிழில் 'டோனி', 'வெற்றிச்செல்வன்', 'கபாலி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ராதிகா ஆப்தே. தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் ஓரளவு வரவேற்பு கிடைத்த போதிலும், அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வரவில்லை. இதனால் பாலிவுட் பக்கம் கவனத்தைத் திருப்பியவர், அங்கு சில வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உயர்ந்துள்ளார். பொதுவாக, எந்தக் கருத்தையும் தைரியமாக வெளிப்படுத்தக் கூடியவர் என்ற பெயர் ராதிகாவுக்கு உண்டு. அவரது கவர்ச்சிப் படங்கள் இந்தி பத்திரிகைகளில் வெளியானபோது சலசலப்பு ஏற்பட்டது.

நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை அதிகரித்துள்ளதாகக் கூறுபவர், மிக ஆபாசமான புகைப்படங்களை வெளியிடுவது ஏன்? என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் அதற்கெல்லாம் ராதிகா அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.