தலைப்பு பிரச்சினையில் இருந்து விடுபட்டுள்ள நிலையில், 'மெர்சல்' திரைப்படம் உலகெங்கும் 3,200க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளி யாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியானதும், திரையரங்கு களின் எண்ணிக்கை அதிரிக்கப் படும் என படத்தைத் தயாரித்துள்ள தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஹேமா ருக்மணி தெரிவித்துள்ளார். இது அந்நிறுவனத்தின் நூறாவது படம் ஆகும். அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மெர்சல்'.
3,200 திரையரங்குகளில் 'மெர்சல்'
1 mins read

