நடிகைகளுக்கு விருந்தளித்து பயத்தைப் போக்கும் நடிகர்கள்

நடிகைகளுக்கு விருந்தளித்து பயத்தைப் போக்கும் நடிகர்கள்

1 mins read
024f91a2-a3b1-428e-910c-70cfe8cb2afd
-

பாலிவுட்டிலிருந்து தென்னிந்தியப் படங்களில் நடிக்க வரும் நடிகைகளின் வரவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் தென்னிந்திய நடிகர்களுடன் இணைந்து நடிக்க பாலிவுட் முன்னணி நடிகைகள் சிலர் அங்குள்ள 'கான்' நடிகர்களுக்குப் பயந்து நடிக்க மறுத்தும் வருகின்றனர். அண்மையில் பிரபாஸுடன் ஜோடியாக நடிக்க கேத்ரினா கைப் முதல் சில நடிகைகளை அணுகிய போது நடிக்க மறுத்தனர். துணிச்சலாக ஒப்புக்கொண்டு நடிக்க வந்திருக்கிறார் ஷ்ரத்தா கபூர். அந்தக் காரணத்துக் காகவும் புது இடம், புது மொழியினால் நடிகை மிரண்டுவிடக்கூடாது என்ப தற்காகவும் ஷ்ரத்தாவுக்குத் தடபுடல் விருந்து கொடுத்து அசத்தினார் பிரபாஸ். ஆடு, கோழி எனக் கிடைத்த விருந்தில் திணறிப்போனார் ஷ்ரத்தா.

அவரையடுத்து ரஜினியின் 'காலா' படத்தில் நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை ஹுமா குரே‌ஷி. முதல், 2ஆம் கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடந்து முடிந்த நிலையில் தற்போது சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்புக்காக சென்னை வந்துள்ள ஹுமாவுக்கு ரஜினி வீட்டிலிருந்து அறுசுவை உணவு வகைகள் சமைத்து அனுப்பி வைக்கப்பட்டது. அதை ருசித்துச் சாப்பிட்டவர் தனது கைத்தொலைபேசியில் அந்த உணவு வகைகளைப் படம் பிடித்து 'டுவிட்டர்' இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் ரஜினிக்கும், 'காலா' படக் குழுவுக்கும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகைகளுக்குக் கோலிவுட் நடிகர்கள் விருந்து வைத்து 'பாலிவுட்' நடிகர்கள் மீது இருக்கும் பயத்தை நீக்குவதற்கே என்கின்றன கோலிவுட்டும் டோலிவுட்டும்.