'கருப்பன்' படத்திற்கு போட்டியில்லை

'கருப்பன்' படத்திற்கு போட்டியில்லை

1 mins read
f45c8945-a856-4302-bf6a-8ebb04ea7c50
-

விஜய் சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா நடித்திருந்த படம் 'கருப்பன்'. கடந்த 29ஆம் தேதி படம் வெளிவந்தது. இந்தப் படத்திற்கு இருவேறுபட்ட விமர்சனங்கள் கிடைத்தன. இந்த வாரத்துடன் படம் திரையரங்கை விட்டு திரும்பியிருக்கவேண்டிய நிலையில் கருப்பனுக்கு அடித்தது யோகம். தமிழக அரசு விதித்துள்ள 10 விழுக்காடு கேளிக்கை வரியை எதிர்த்துத் தயாரிப்பாளர் சங்கம் 6ஆம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடமாட்டோம் என்று அறிவித்தது.

இந்த அறிவிப்பால் நேற்று வெளிவர வேண்டிய 7 படங்கள் வெளிவரவில்லை. அதனால் அந்தப் படத்திற்கு ஒதுக்கி வைத்திருந்த திரையரங்குகளைக் கருப்பனுக்குக் கொடுத்துவிட்டார்கள். இதனால் கருப்பன் படத்திற்கு 100 திரையரங்குகள் வரை அதிகரித்துள்ளது. இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது. விஜய் சேதுபதி படத்திற்குப் படம் வித்தியாசமான வேடங்களில் வருவார். தற்பொழுது அவர் நடித்து வரும் படத்தில் படத்தில் இருப்பது நவீனக்காலத்து நாயகனாகத் தோன்றுகிறார்.