எட்டு ஆண்டுகள் உதவி இயக்குநராக இருந்தேன். அதற்கு முன் திரைத்துறையைப் பற்றி படித்தேன். பிறகு குறும்படங்கள் எடுத்து தேசிய விருது பெற்றேன். விஜய் கால்ஷீட்டுக்காக, ஒன்றரை ஆண்டுக் காத்திருந்தேன். என் வளர்ச்சி எல்லாமே ஒரே நாளில் சாத்தியமாகவில்லை. படிப்படியாகக் கிடைத்ததுதான். 'ஆளப் போறான் தமிழன்' என்று படத்தில் பாட்டு அமைத்தது அரசியலைக் குறிவைத்தா? "விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று பலரும் ஆசைப்படுகின்றனர். ஆனால் அவர்தான் இந்த விஷயத்தில் முடிவு எடுக்கவேண்டும். இந்தப் படத்தில் ஆளுமையான ஒரு பாடல் தேவைப்பட்டது. அதனால்தான் இந்தப் பாட்டு இடம் பெற்றுள்ளது". அடுத்த படத்திற்கு உங்களுடைய நாயகன் யார்? "விஜய்யுடன் மீண்டும் ஒரு படம் செய்யவேண்டும். அதற்குப்பின் ரஜினியை இயக்கவேண்டும். பாலிவுட்டிலும் என்னை அழைக்கிறார்கள். இன்னும் சில படங்களை தமிழில் இயக்கிய பிறகு மெதுவாக பாலிவுட்டில் கால் வைக்கலாம் என்று இருக்கிறேன்," என்றார் அட்லி.
'மெர்சல்' படத்தில் நடிகர் விஜய்யும் நடிகை காஜல் அகர்வாலும் தோன்றும் ஒரு பாடல் காட்சி.

