சினேகனுக்கு ஜோடியாக ஓவியா

சினேகனுக்கு ஜோடியாக ஓவியா

1 mins read
ed1919f1-c5a4-48e5-b4fa-d126300ff978
-

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் அதிக புகழுக்கு ஆளானவர்கள் சினேகனும் ஓவியாவும். அதுவும் 'ஓவியா ஆர்மி' ஆரம்பித்துக் கலக்கி வருகின்றனர் ஓவியா ரசிகர்கள். இந்நிலையில் ஓவியாவும் அவருக்கு நண்பரான சினேகனும் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை, 'எங்கேயும் எப்போதும்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்த சத்யா தயாரிப்பதாகவும் தகவல் வந்தது. இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் சினேகன் சம்மதித்துவிட்டாராம். ஆனால் ஓவியாவிடம் இன்னும் இவர்கள் கதையைச் சொல்லவே இல்லை. அந்தப் பொறுப்பையும் தான் எடுத்துக் கொண்ட சினேகன், "ஓவியாவை சம்மதிக்க வைப்பது என் வேலை," என்று வாக்குக் கொடுத்திருக்கிறாராம். தற்போது 'காஞ்சனா 3', 'காட்டேரி' உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஓவியா. அவரிடம் கதை கூடச் சொல்லாமல் அவர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள் படக்குழுவினர்.