திரையுலகைப் பொறுத்தவரையில் தனது குருநாதர் என்றால் அது சிம்புதான் என்று வெளிப்படை யாகத் தெரிவித்துள்ளார் நடிகர் சந்தானம். தன்னுடைய புதுப் படத்துக் காக சிம்பு இரவு பகல் பாராமல் இசையமைத்துக் கொடுத்ததாக வும் அவர் நன்றியுடன் குறிப் பிட்டார். 'சக்க போடு போடு ராஜா' படத்தின் முன்னோட்ட வெளி யீட்டு விழாவில் பேசியபோதே சந்தானம் இதைத் தெரிவித்தார். இதே மேடையில் பல்வேறு கலகலப்புகளும் நடந்தேறியது சுவாரசியம். கதாநாயகனாக தன்னை உயர்த்திக்கொண்ட பிறகு ஆள் அறவே மாறிவிட்டார் சந்தானம். அவரது படங்களும் வசூல் ரீதியில் சோடை போகவில்லை. தற்போது சந்தானம் நாயக னாக நடித்துள்ள படம் 'சக்க போடு போடு ராஜா'. இதில் வைபவி சாண்டில்யா நாயகியாக நடித்துள்ளார்.
'சக்க போடு போடு ராஜா' படத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா.

