இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு 'நெஞ்சில் துணி விருந்தால்'. "மனைவி கடவுள் தந்த வரம்... தாய் கடவுளுக்கு நிகரான வரம். நண்பன் கடவுளுக்குக் கூட கிடைக்காத வரம். "ஆனால் எங்கோ பிறந்து, வளர்ந்து சுயநலமே இல்லாமல் வருவதுதான் நட்பு. அதைப் பற்றி பேசும் படம் இது," என்று உற்சாகத்துடன் விவரிக்கிறார் சுசீந்திரன். 'நான் மகான் அல்ல' பாணி யில் செல்லும் கதையாம். இதில் கூறப்படும் கருத்துக்கு சமூகத் தில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறாராம். "என்னை இவ்வளவு தூரம் அள்ளி அணைத்து அழைத்துக் கொண்டு வந்ததே நண்பர் கள்தான். இதில் நட்பு பற்றிய நல்ல புரிதலுக்கு இடமிருக்கிறது. ரொம்ப மகிழ்ச்சியான கலகலப் பான நண்பர்கள், நட்பு ஆழமாகும் இடத்தில் திடீரென்று ஒரு சம் பவம் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறது. கடைசியில் என்ன ஆனது என்பதுதான் கதை.
'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் சந்தீப், மெக்ரின்.