டோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் படம் 'பக்கா'

டோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் படம் 'பக்கா'

1 mins read
54fd8090-bb79-471f-b837-725422d9c0af
-

திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் விக்ரம் பிரபு. அது மட்டுமல்ல, கதைப்படி தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர், இந்திய கிரிக்கெட் வீரர் டோனி பெயரில் ரசிகர் மன்றமும் நடத்துவாராம். 'பக்கா' படத்தில்தான் விக்ரம் பிரபுவுக்கு இப்படியொரு கதாபாத்திரம் அமைந்துள்ளது. இதில் நிக்கி கல்ராணி, பிந்துமாதவி இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர் களுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யா இசையமைப்பில் யுகபாரதி பாடல் களை எழுதியுள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.எஸ்.சூர்யா "ரஜினிகாந்த் பெயரில் ரசிகர் மன்றம் வைத்திருப்பவர் நிக்கி கல்ராணி. கிராமத்து பெரிய மனிதர் மகள் பிந்து மாதவி. இந்த மூன்று பேருக்கும் இடையே நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள்தான் கலகலப்பான 'பக்கா'. இது வரை நான் ஏற்காத யதார்த்தமான கதாபாத்திரம் அமைந்திருப்பதில் மகிழ்ச்சி," என்கிறார் விக்ரம் பிரபு.