தமிழகத்தைப் புரட்டிப் போட்ட இரண்டு நிகழ்வுகளின் இணைப்பாக உருவாகிறது 'தொட்ரா'. பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் நாயகனாகவும் புதுமுகம் வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர். "வட மாவட்டங்களில் நடைபெற்ற, தமிழகத்தை உலுக்கிய இரு பயங்கரமான உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது. காதல் என்றாலே பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும். வியாபாரிகளின் கையில் காதல் சிக்கிக்கொண்டால் என்னாகும் என்பதை இந்தப் படத்தில் விரிவாக அலசியுள்ளோம்," என்கிறார் இயக்குநர் மதுராஜ். தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
மதுராஜ் இயக்கத்தில் 'தொட்ரா'
1 mins read
-

