ஒத்திவைக்கப்பட்ட பாவனா திருமணம்

ஒத்திவைக்கப்பட்ட பாவனா திருமணம்

1 mins read
d280c104-13c6-460c-9e0c-2b985c307547
-

நடிகை பாவனாவின் திருமணத் தேதி திடீரென மாறியுள்ளது. தனது காதலர் நவீனை அக்டோபர் 26ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்திருந்தார் பாவனா. அதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இந்நிலையில் திடீரென திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பாவனா, நவீன் திருமணத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மூன்றாவது வாரத்தில் நடத்த இரு குடும்பத்தாரும் முடிவு செய்துள்ளனராம். இந்தத் தகவலை பாவனாவே தெரிவித்துள்ளார். "திரைத்துறைக்கு ஒருசிலரால் கெட்ட பெயர் வருகிறது. ஆனால் இதுவும் நல்ல தொழில்தான். எனது திருமணத்துக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. அதற்குள் திருமண வாழ்க்கைக்குத் தயாராவேன். திருமணத்துக்குப் பிறகும் நான் நடிப்பேன். எனது இந்த முடிவுக்கு குடும்பத்தாரின் முழுமையான ஆதரவு உள்ளது," என்று பாவனா கூறியுள்ளார்.