திரையுலகில் புத்துணர்வும் திருப்பமும் ஏற்படுத்தும் '100% காதல்'

திரையுலகில் புத்துணர்வும் திருப்பமும் ஏற்படுத்தும் '100% காதல்'

1 mins read
21d0a2d9-b315-48ec-b24f-628c7c45e1f8
-

கிரியேட்டிவ் சினிமாஸ் என்.ஒய். சுகுமார், என்.ஜே.என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் '100% காதல்'. ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்திற்கு அவரே இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு- கணேஷ். ஆர், கலை-தோட்டா தரணி, நடனம்-பிரேம் ர‌ஷித், நிக்ஷன். முன்னணி ஒளிப்பதிவாளரான எம்.எம். சந்திரமௌலி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். "இந்தப் படம் 100% முழுவதும் காதலை மட்டுமே மையமாகக் கொண்டு உருவாகிறது. இன்றைய சூழலில் இந்தப் படம் தமிழ்த் திரை உலகில் புத்துணர்ச்சியையும் புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தும்," என்று சந்திரமௌலி நம்பிக்கை தெரிவித்தார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெறுகிறது. வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.