இருநாளில் 'மெர்சல்' வசூல் ரூ.50 கோடி

இருநாளில் 'மெர்சல்' வசூல் ரூ.50 கோடி

1 mins read
c8314530-cd3b-4cb5-920b-d292996267e8
-

ரஜினி, அஜித், விஜய் நடிக்கும் படங்கள் வெளிவந்த மறுநாளே படத்தின் முதல்நாள் வசூல் எவ் வளவு என்று ஒரு தகவல் பரவி விடும். அதுபோல் இந்த ஆண்டில் வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் மட்டும் பிரம் மாண்ட படமான 'பாகுபலி-2'க்கு பின் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உலகம் முழுவதும் 'மெர்சல்' படம் வெளிவந்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண் டாடி வருகின்றனர். இப்படம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்து வந்தபோதும் தொடர்ந்து வசூலைக் குவித்து வருகிறது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் சுமார் 25 கோடி வசூலித்துள்ளதாகவும் இருநாட்க ளில் கிட்டத்தட்ட ரூ. 50 கோடி வரை வசூலித்துள்ளதாக கணக்கு சொல்கிறார்கள். கேரளாவில் மலையாளப் படங்கள் வசூலித்ததை விட 'மெர்சல்' சுமார் 6 கோடி வரை கூடுதலாக வசூல் செய் துள்ளதாம். கர்நாடகாவிலும் இதர மாநிலங்களிலும் சுமார் 5 கோடி ரூபாயும் வெளிநாடுகளில் 12 கோடி ரூபாய் வரையிலும் வசூல் குவிந்துள்ளது.