'ஸ்கெட்ச்' படத்தில் சும்மா தகதகன்னு தங்கம்போல் மின்னுவார் என்று கூறியுள்ளார் இயக்குநர் விஜயசந்தர். தனது முதல் படத்தில் சிம்புவை 'வாலு' ஆக்கிய விஜய்சந்தர், இப்போது தனது இரண்டாவது படத்தின் மூலம் விக்ரமுக்கு 'ஸ்கெட்ச்' போட்டிருக்கிறார். உச்சத்தில் உள்ள இந்த நடிகர்களின் 'கால்ஷீட்' வாய்ப்புகளை எல்லாம் கதைதான் தனக்கு வாங்கிக் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். "தமன்னா, இந்தப் படத்தில் பயங்கர பளபளப்பாக இருப்பார். படத்தில் கல்லூரி மாணவி வேடம் அவருக்கு. முக்கியமான பாத்திரம்தான். "சும்மா பாட்டுக்கு மட்டும் வந்துவிட்டுப் போகிற நாயகியாக இல்லாமல் கதையோடு ஒன்றிய கதாபாத்திரம். "காதல், பாசம், சென்டிமென்ட், பிரிவு என்று எல்லா உணர்வுகளும் கலந்த மாதிரி பாத்திரம். இது பக்காவான கமர்ஷியல் படம்தான். ஆனால் விக்ரம்-தமன்னாவின் காட்சிகள் அழகான காதல் படத்துக்கான தனிச்சிறப்புடன் இருக்கும்.
"அதனால்தானோ என்னவோ? தமன்னா தன் னுடைய டுவிட்டர் பக்கத்தில் நான் ஒவ்வொரு நாளும் ரசித்து ரசித்துப் பண்ணிய படம் 'ஸ்கெட்ச்' என்று எழுதியிருந்தார். "இந்தப் படத்தோட வெளியீட்டுக்காகத்தான் ஆவலோடு காத்திருப்பதாகவும் சொன்னார். "அவர் டுவிட்டில் எழுதியது நூறு விழுக்காடு உண்மை என்று படம் பார்க்கிறப்போ நீங்களே உணர்வீர்கள். இந்தக் கதையை நன்றாக உள் வாங்கி நடித்துள்ளார். "இந்தப் படத்தில் விக்ரமையோ, தமன்னா வையோ நீங்கள் பார்க்கமுடியாது. அவரவர் களின் பாத்திரம்தான் உங்க மனதிலே நிறைந்து நிற்கும் "விக்ரம் சார், எப்பவுமே தன்னோட நடிப்பு ஆற்றலுக்குத் தீனி போடும் வேடங்களைத் தான் தேடிக்கொண்டே இருப்பார். இந்தக் கதையை வடசென்னை பின்னணியில் அமைத் துள்ளேன். கதையில் இடம்பெறும் பாத்திரங்கள் அத்தனை பேருமே வடசென்னையில் ஒரு காலத்தில் கொடிகட்டி வாழ்ந்தவர்கள்.

