சவாலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க சமந்தா முடிவு

சவாலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க சமந்தா முடிவு

1 mins read
824ce03b-5dd3-44d7-a3c9-19ce55a7a71f
-

திருமணமாகிவிட்டாலும் தனது திரையுலக வாழ்வில் எந்தவொரு மாற்றமும் நிகழாது என்று கூறிய சமந்தா தற்போது சவாலான கதா பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறியுள்ளார். "படங்களின் தேர்வைப் பொறுத்தவரை, நானே நிறைய மாறியிருக்கிறேன். "நடிப்பில் 8 ஆண்டுகளைக் கடந்திருப்பதால் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விருப் பப்படுகிறேன்.

"மிகவும் சவாலான கதாபாத் திரங்களில் நடிக்க ஆசை. ஒரே விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதால் போரடிக்கிறது. "திருமணத்துக்குப் பிறகு நான் நடிப்பை விட்டுக் கொடுத்து விடுவேன் என்று நாக சைதன்யா மிகுந்த கவலையாக இருந்தார். "தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் திருமணம் ஆன பெண் களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற தன்மையை நான் அகற்ற வேண் டும். "திருமணத்துக்குப் பிறகு முன்பைவிட மும்முரமாக நான் நடிப்பதை இந்த உலகம் காண வேண்டும் என சைதன்யா விரும்பி னார். நிச்சயமற்றதன்மை திரை உலகில் கூட நிலவலாம்.