பிரபுவோடு போட்டி போடும் பிரசாந்த்

பிரபுவோடு போட்டி போடும் பிரசாந்த்

1 mins read
21d478e3-436e-4fdb-ae73-34795d75e191
-

'சாகசம்' படத்துக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் 'ஜானி'. வெற்றிச்செல்வன் இயக்கத் தில் தான் நடித்து வரும் இப் படத்தில் பிரபுவுடன் போட்டிப் போட்டு நடித்ததாக நடிகர் பிரசாந்த் கூறியிருக்கிறார். இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறிய பிரசாந்த், "இந்தப் படத்தில் நான் இதுவரை நடிக் காத கதாபாத்திரத்தில் நடிக்கி றேன்.

"நான் மட்டும் அல்ல மற்ற வர்களும் அப்படித்தான். பிரபு இதற்கு முன்பு நடிக்காத ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். "பிரபு சாருடன் நடிக்கும்போது மிகவும் பயத்துடன் நடித்தேன். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கலகலவென சிரித்து பேசிக் கொண்டு இருப்பார். "ஆனால் படப்பிடிப்பு துவங்கி விட்டால் அப்படியே கதா பாத்திர மாக மாறி விடுவார். ஒவ்வொரு காட்சியிலும் அவர் தான் சிறப் பாக நடிப்பார்.

ஜானி படப்பிடிப்பில் பிரசாந்துடன் பிரபு.