காஜலைக் கிறங்கடித்த கவிதைகள்

காஜலைக் கிறங்கடித்த கவிதைகள்

1 mins read
dd14c691-da7b-4cf1-a070-4b030557450f
-

படப்பிடிப்பு இடைவேளைகளில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் சில நடிகர், நடிகைகளுக்கு உண்டு. காஜல் அகர்வாலை இந்தப் பட்டியலில் தயக்கமின்றிச் சேர்க்கலாம். அண்மையில் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர் ரூமியின் கவிதைகளைப் படித்தாராம் காஜல். அந்தக் கவிதைகள் கிறங்கடித்தனவாம். "நான் என்பது என்னுடைய அழகிய கூந்தலும் பளபளப்பான தோலுமல்ல. இந்தக் கூட்டுக்குள் வாழும் என்னுடைய ஆன்மாதான் நான்," என்று ரூமி எழுதிய வரிகளை தன்னைச் சந்திப்பவர்களிடம் எல்லாம் சொல்லி சிலாகிக்கிறார். பதிலுக்கு திரையுலகத்தினரோ, "காஜல் ரொம்ப ரசனையானவர். அதனால்தான் அவரால் கவிதைகளை ரசிக்கமுடிகிறது," என்று பாராட்டித் தள்ளுகின்றனர்.