'மெர்சல்' படத்தில் இடம்பெற்றுள்ள எந்தக் காட்சியும் நீக்கப்படமாட்டாது என்று அதன் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த தீபாவளியன்று வெளியானது 'மெர்சல்'. வசூல் ரீதியில் பெரிய வெற்றியைப் பெறும் என்று கூறப்படும் நிலையில், சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது இப்படம். மருத்துவத்துறையில் உள்ள ஊழல்களைப் பட்டியலிட்டுள்ள இப்படத்தில், மத்திய மாநில அரசுகளைத் தாக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி, டிஜிட்டல் இந் தியா போன்ற நடவடிக் கைகளைக் கடுமையாக விமர்சிக்கும் காட்சி களும் வசனங்களும் இ ட ம் பெ ற் று ள் ள து பாஜகவினரை அதி ருப்தியில் ஆழ்த்தி யது. இதையடுத்து அ க் கு றி ப் பி ட் ட காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜக போர்க்கொடி உயர்த் தியது. இதனால் 'மெர்சல்' படத் துக்கு தேசிய அளவில் முக்கியத் துவம் கிடைத்துள்ளது.
'மெர்சல்' காட்சிகள் நீக்கப்படாது
1 mins read
-

