அத்வைதன்: படப்பிடிப்பில் நிகழ்ந்த அதிசயம்

அத்வைதன்: படப்பிடிப்பில் நிகழ்ந்த அதிசயம்

1 mins read
5ed8ca28-d75e-4a48-af8c-494f355d4a7d
-

கிஷோர், யக்னா ஷெட்டி, சுலீல் குமார், மிதுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக் கும் படம் 'களத்தூர் கிராமம்'. இளையராஜா இசை என்பதால் தெம்பாக இருக்கிறார் இதன் தயாரிப்பாளர் ஏ.ஆர். சீனுராஜ். படப்பிடிப்பு நடந்தபோது ஓர் அதிசயம் நிகழ்ந்ததாகச் சொல்கி றார் இயக்குநர் சரண் கே.அத்வை தன். அது என்ன? "நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடம் மிகவும் வறண்ட பகுதி. சுமார் 5 கிலோமீட்டர் சுற்றுப்புறத் திற்கு வேறு எந்த ஊரும் இல்லை.

சில நேரங்களில் தண் ணீர் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு படப்பிடிப்பை நடத்தினோம். "கிட்டத்தட்ட இரண்டு வருட காலம் விட்டு விட்டு நடைபெற்ற படப்பிடிப்பின்போது அந்தப் பகுதி மக்கள் எங்களுக்கு நிறையவே ஒத்துழைப்பு கொடுத்தனர். "ஒருநாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென மழைபெய்ய ஆரம்பித்தது. அன் றைய தினம் மிக முக்கியமான காட்சியைப் படமாக்க வேண்டி யிருந்தது. இதற்காக கிஷோர் சுமார் ஆறு மணி நேரம் ஒப்பனை போட்டு தயாராகி இருந்தார்.

'களத்தூர் கிராமம்' படத்தில் கிஷோர், யக்னா ஷெட்டி.