பிரியதர்ஷன்: என் வாழ்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்த படம் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி, நமீதா பிரமோத், பார்வதி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'நிமிர்'. மூன்சாட் எண்டர்டெயின் மென்ட் என்ற நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், மகேந்திரன், சண்முகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இதில் முதன்முறையாக புகைப்படக் கலைஞர் வேடத்தில் நடித்துள்ளார் உதயநிதி. தன் சுயபலத்தை தானே கண்டறிந்து வில்லனைப் பழி வாங்கும் கதாபாத்திரமாம். இது தமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படம் என்கிறார் பிரியதர்ஷன். என்ன காரணமாம்? இயக்குநர் மகேந்திரனும் இப்படத் தில் நடித்துள்ளார் அல்லவா? அதைத் தான் முக்கியத்துவம் எனக் குறிப் பிடுகிறார்.
"இவ்வளவு ஆண்டு காலம் திரைத் துறையில் இருந்தாலும் இயக்குநர் மகேந்திரனுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில்லை. முதலில் அவருக்கு உதவி இயக்குநராக இருக்க ஆசைப் பட்டேன். அது நடக்காமல் போனது. "இந்தப் படத்தில்தான் அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. உதயநிதி ஸ்டாலினின் தந்தையாக அவர் நடித்துள்ளார்," என்றவர் சமுத் திரக்கனியின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டுகிறார். சமுத்திரக்கனியின் நடிப்பைப் பாராட்ட தமக்கு வார்த்தைகளே கிடைக்க வில்லை என்று சொல்பவர், அவ்வளவு சிறப்பாக சமுத்திரக்கனி நடித்திருப்பதாகப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார். இப்படத்தின் வசனங்களை எழுதியிருப்பதும் சமுத்திரக்கனிதானாம்.

