'சாமி 2': அதிருப்தியால் விலகினார் நாயகி திரிஷா

'சாமி 2': அதிருப்தியால் விலகினார் நாயகி திரிஷா

2 mins read
a864e411-ad95-422c-82a5-1bfcc179093d
-

'சாமி' படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து விலகிக் கொள்வதாக நடிகை திரிஷா தெரிவித்துள்ளார். படத்தில் தனது கதாபாத்திரம் உட்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பில் ஏற்பட்ட கருத்து வேறு பாடுகளே தனது இம்முடிவுக்குக் காரணம் என அவர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2003ல் வெளியானது 'சாமி'. ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான இப்படம் பெரியளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஹரியும் விக்ரமும் கைகோர்த்துள்ளனர். இதையடுத்து படத்தின் இரு நாயகிகளாக திரிஷாவும் கீர்த்தி சுரே‌ஷும் ஒப்பந்தம் செய்யப்பட்ட னர்.

பாபி சிம்ஹாவும் முக்கிய வேடத்தை ஏற்றுள்ளார். அண்மையில் இப்படத்தின் பூசை நடைபெற்றது. இதில் விக் ரம், கீர்த்தி சுரேஷ் இசையமைப் பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர். தற்போது விக்ரம் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்படத்தில் இருந்து திரிஷா விலகி உள்ளார். தனக்கான கதாபாத்திரத்தில் வலுவில்லை என்ற காரணத்தி னால் இப்படத்தில் இருந்து விலகி இருப்பதாக திரிஷா கூறியுள்ளார். படக்குழுவுக்கு தமது வாழ்த்துக் களையும் தெரிவித்துள்ளார். 'சாமி' படத்தின் இரண்டாம் பாகம் 'சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. திரிஷாவின் இந்த திடீர் முடிவு படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. தங்களிடம் முன்கூட்டியே தக வல் ஏதும் தெரிவிக்காமல் இவ் வாறு அறிவித்துள்ளதாக படக் குழுவினர் அதிருப்தி தெரிவித்துள் ளனர். திரிஷாவுக்குப் பதிலாக இப்படத்தில் ஒப்பந்தமாகப் போகும் நாயகி யார் என்பது விரைவில் தெரியவரும்.

'சாமி' படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் விக்ரம், திரிஷா.